ஏனையவை

கடவுள்...!

சுஜாதா
19, June 2017
Views 115

கடவுள் எங்கே இருக்கின்றான்
கண்டால் கொஞ்சம் சொல்லுங்களேன்
கருணை உள்ள நெஞ்சம்தான்
கடவுள் அவனின் இருப்பிடமோ
அன்பு உள்ள அனைவருமே
அவனின் சொந்தம் ஆகிடுமோ
ஆசை அற்ற மனிதர்களோ
அவனின் உருவை அறிவாரோ
தீமை செய்த யாவருமே
அவனை அறியாதிருப்பாரோ
பணிவு எங்கே இருக்கிறதோ
அங்கே தெரியும் அவனுருவம்