நடப்பு கவிதை

ஐல்லிக்கட்டு...

02, January 2017
Views 2826

சண்டி கட்டு கட்டி
சண்டை போட்டு
சாகடிப்பதல்ல ஐல்லிக்கட்டு.
புல்லுக்கட்டு ஊட்டி
புள்ளை போல ஆட்டி
மல்லுக்கட்டி நாமும்
மாட்டோடு துள்ளிக்கிட்டு
மகிழ்வாக விளையாடுவது.

புழுக்கிறாஸ் பீட்டா இவை
எப்ப எப்படி ஏன் வந்தவை .
என் விளையாட்டின்
வீரம் மட்டுமல்ல ஏன்
வரலாறும் புரியாது இவைக்கு .

வாங்கிய பணத்துக்கு
வக்காலத்து பேசுகின்ற
எக்காளத்தர்களே நீங்கள்.
மாடுரித்து கறியேத்தும்
கயவர்களில் நீரும் ஒருவர்.

உற்பத்தியாகும் ஒவ்வொரு
பொருட்களின் பின்னால்
எத்தனை மிருகம்
இறந்தது என்பது
உங்களுக்கேதும் புரியாதோ..?
புரிய வைக்க
நாம் முயன்றால்
அழிவது  மிருகங்களல்ல.
நீங்களாகத்தான் இருக்கும்.

ஐல்லிக்கட்டு. ......!!!
விளையாட்டு மட்டுமல்ல
எம் அடையாளமும் .
அழிக்கவும் முடியாது
அடக்கவும் முடியாது....