புரட்சி கவிதை

தமிழகத்தின் அன்னைக்கு.....

02, January 2017
Views 2675

தமிழகத்தின் மாண்பு மிகுந்த
முதலமைச்சராய்- பல கோடி
மக்கள் மனங்களில் அம்மாவாய்
ஒப்பற்ற நடிகையாய்
இரும்பு பெண்மணியாய்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
சாேதனைகளும், சாதனைகளுமாய்
வாழ்க்கை நகா்ந்து செல்ல
தமிழக மக்களின் மனங்களில்
உரிமைக்குரலாய் ஓங்கி ஒலித்த
வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது
இன்று தமிழக தேசம்
சகாப்தமாக வாழ்ந்து -இன்று
சாித்திரமாகியுள்ள
தமிழக அன்னையே
உங்கள் ஆன்மா
சாந்தியடையட்டும்....