நடப்பு கவிதை

மண் வாசம்

02, January 2017
Views 390

கவியெழுத கை பேசி
எடுத்து கையடக்கி
காத்திருந்த வேளை.
கண் கலங்க
நெஞ்சமதில் வந்தமர்ந்த
நினைவோ

என் நெஞ்சகலா
ஊரின் பல பாகங்கள்.......!
அதிகாலை வேளை
அலாரமும் தோற்றுவிடும்
குயில்களின் குரலோசையில்.
கதிரவன் வரவைப்
பார்த்து கலைந்து போகும்
பனிமூடல் கார் மேக கூட்டங்கள்.

என்னையும் கண் விழிக்க
வைக்கும். தோட்ட வெளியில்
தொலை தூர கூச்சல்
துல்லியமாக கேட்கும். ஆடு
மாடுகளெல்லாம் ஆரவாரம்
கொள்ளும் அன்பையும்
அள்ளித்தரும். குடம்
கொண்டு அங்கே குமரிகள்
குடிதண்ணீர் எடுக்க போகயிலே...!

கிணத்தடியும் குதூகலம்தான்.
இணுங்கி தோட்ட கந்தனின்
இடைவிடா மணியோசை மனதுக்கு ஒரு
மகிழ்வுதான் அள்ளி குளிக்கும் ஆனந்தம்
பள்ளிச்சிறாரின் பரபரப்பு
இத்தனைக்கும் ஈடோ இங்கு.