நடப்பு கவிதை

புதிய ஆண்டே வருக வருக.. 2017

01, January 2017
Views 565

கடந்த வருடம் கழிந்து போக
அவை தந்த வடுக்களையும்
நினைவுகளையும் தகர்த்து
அதன் இருள் தனை கலைந்து
பூமி எங்கும் புது வாசம் வீசி வருக வருக - புதிய ஆண்டே.

இயற்க்கை அன்னையின் கோவம் தனை நீக்கி
பார் எல்லாம் செழிக்க வைத்து
உலகம் எங்கும் அமைதியை தோற்றுவிக்க
புதிய ஆங்கில வருடமே நீ விரைந்து வருக... வருக...

மானிடரின் துன்பங்கள் நீங்கி
அவர்களுக்கும் புது உணர்வு கொடுக்கும் ஆண்டாக திகழ
நீ மலந்து வருக வருக..

மானிடரின் வேற்று மைகளை புறம் தள்ளி
அவர்களுக்கிடையில் நல்ல எண்ணங்களை தூவி
அவர்களின் அறியாமை நீக்கி
அன்பு என்ற வெள்ளம் கரை புரண்டு ஓடி
ஒற்றுமையை உருவாக்கிட விரைந்து வருக வருக..

வையகம் எங்கும் நீதி கேட்டு கண்ணீர் விடும் உறவுகளின்
கனவு மெய் பட்டு அவர்கள் உள்ளம் தோறும் விடுதலை கொடுக்கும்
ஆண்டாக திகழ வருக வருக.. புதிய ஆண்டே