நடப்பு கவிதை

வருக! வருக! புத்தாண்டே…!

01, January 2017
Views 523

உன்னுக்குள் எமை வைத்து
ஓர் ஆண்டு உன்வாழ்வின்
எண்ணற்ற நிமிடமெல்லாம்
எமை காக்க வருவாயே
 
பதினாறு எமக்கழித்த
பலசோக கதையுண்டு
அழுதகண்கள் உன் வரவை
அன்போடு பார்க்கிறது

புதிய உன் வரவால்
பூமித்தாய் மலரட்டும்(மழலை)
பூக்காத மரமெல்லாம்
பூத்து குலுங்கட்டும்

இயற்கை செளிக்கட்டும் - அதன்
இன்னல்கள் அழியட்டும்
இன்பப் பெருக்கெடுத்து
துன்பங்கள் துலையட்டும்

பொய்,களவு,பொறாமை
போலித்தன வாழ்க்கை
சாதி,மத சண்டை
சரும நிற வெறித்தனம்
அரசியல் சாக்கடை
ஆதிக்க தலைக்கனம்
அகதியாய் அலைவு
அடிமை புளு வாழ்வு

காலத்தால் அழியாத - இந்த
கதி நிலை போக்க
வீரனாய் வருக - நாளை
விடியட்டும் உலகம்....