நடப்பு கவிதை

புதிய டைரி - 2017

01, January 2017
Views 316

ஆண்டு ஒன்று பிறந்து விட
புதியன புகுதலும்
பழையன கழிதலுமாய்
நானும் புதிதாய் பிறப்பெடுப்பேன்.

பல வா்ண நிறங்களில் நான்
புத்தக சாலைகளில் புதிய வரவாக
எழுத்தாணி பிடிக்கும் கரங்களுக்கு
ஒவ்வொரு ஆண்டிலும் புதிய டைரியாய்.

கடந்து விட்ட நினைவுகளை
காலத்தின் பதிவுகளை
கச்சிதமாய் பதிவு செய்து
பல பேரின் பொக்கிசமாய்
காத்திரமாய் சேவை செய்ய

இன்று மக்கள் இயந்திர வாழ்க்கையிலும்
நவீன தொழில்நுட்ப வாழ்க்கையிலும்
என் வரவை அலட்சியம் செய்து நிற்க
நானும் ஒவ்வோ் ஆண்டும்
புதிதாய் பிறப்பெடுப்பேன்.

என்னை கரம் பற்றி நிற்போற்கு
மகத்தான சேவை செய்து
காலத்தின் பதிவு தனை
கச்சிதமாய் புடம் போட
புதிய டைரியாய்....