ஏனையவை

கதிரவன்

சுஜாதா
21, October 2015
Views 123013

காலங் கடக்குமுன்னே
கடற்கரைக்கு வாடா பிறர்
கண்விழிக்குமுன்னே வந்து
கள்ளமுத்தம் தாடா
வாடைக் குளிரெடுக்க
வந்தணைக்க வாடா
மயக்கத்தையே தீர்த்து நித்தம்
விழிப்படைய வாடா
காணக் கண் கூசுமடா
கதிரவனே வாடா
வெப்பத்தையே வீசி நிற்கும்
வெய்யோனே வாடா
சுற்றும் பூமி சுற்றி வரச்
சூரியனே வாடா
சுந்தரத் தமிழ் எடுத்துச்
சுற்றி வந்தோம் வாடா